இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இந்தியாவில் உள்ள அனைத்து உற்பத்தி அலகுகளிலிருந்தும் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சோதனை செய்ய உத்தரவிட்டது.
எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய நிறுவனங்கள் சிக்கன், மட்டன், மீன், சாம்பார் உட்பட பல்வேறு உணவுகளை தயாரிக்க மசாலா பொடிகளை விற்பனை செய்து வருகின்றன. உள்நாடு மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் அந்த மசாலா பொடிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் மசாலாவில் அளவுக்கு அதிகமாக ‘எத்திலீன் ஆக்சைடு’ கலந்திருப்பதாகவும், அதனால் அந்த மசாலா பொருட்களுக்கு தடை விதிப்பதாகவும் கடந்த வாரம் சிங்கப்பூர் அரசு அறிவித்தது.
இதனை தொடர்ந்து, எம்டிஎச் பிரைவேட் லிமிடெட் மற்றும் எவரெஸ்ட் புட் புராடெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் மசாலா பொருட்களுக்கு ஹாங்காங் அரசும் தடை விதித்தது. ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு மையம் வழக்கமான ஆய்வு மேற்கொண்ட போது மசாலா பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக ‘மெட்ராஸ் கர்ரி பவுடர்’, ‘சாம்பார் மசாலா பவுடர்’, ‘கர்ரி பவுடர்’ ஆகிய 3 மசாலா பொருட்களில் அதிகளவு ரசாயனம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டள்ளது.
மேலும், இந்த மசாலாக்களை விற்க வேண்டாம் என்று தங்கள் விற்பனை நிலையங்களுக்கு ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களில் மசாலா பொருட்களில் கலந்துள்ள ரசாயனம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படும். புற்றுநோய், மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஹாங்காங் எச்சரித்துள்ளது.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் மசாலாப் பொருட்கள் தடைசெய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், அதற்கு எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் பிரைவேட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”எவரெஸ்ட் எந்த நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. ஹாங்காங்கின் எச்சரிக்கையைத் தொடர்ந்து 60 எவரெஸ்ட் தயாரிப்புகளில் ஒன்று மட்டுமே தற்காலிகமாக ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பானது மற்றும் உயர் தரம் வாய்ந்தது, அதன் உற்பத்தி வசதிகளில் கடுமையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களைப் பேணுகிறது” என்று வலியுறுத்தியது.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இந்தியாவில் உள்ள அனைத்து உற்பத்தி அலகுகளிலிருந்தும் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சோதனை செய்ய உத்தரவிட்டது.
இதுகுறித்து கூறியதாவது, “நாடு முழுவதும் மசாலா மாதிரிகள் சேகரிக்கும் செயல்முறை தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் அனைத்து மசாலா உற்பத்தி பிரிவுகளிலும் மாதிரிகள் சேகரிக்கப்படும். ஆய்வக அறிக்கை சுமார் 20 நாட்களில் சோதனைக்குப் பிறகு வெளியிடப்படும் என தெரிவித்தனர். இந்த மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படும். இந்தியாவில் உணவுப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்திய மசாலாப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்
எத்திலீன் ஆக்சைடு கணிசமான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது மற்றும் நாள்பட்ட ஆபத்தானதாக கருதப்படுகிறது. புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) எத்திலீன் ஆக்சைடை ‘குரூப் 1 கார்சினோஜென்’ என வகைப்படுத்துகிறது, இது மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என்ற முடிவுக்கு போதுமான ஆதாரங்களைக் குறிக்கிறது.
எத்திலீன் ஆக்சைடு கணிசமான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது மற்றும் நாள்பட்ட ஆபத்தாக கருதப்படுகிறது. புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) எத்திலீன் ஆக்சைடை ‘குரூப் 1 கார்சினோஜென்’ என வகைப்படுத்துகிறது, இது மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என்ற முடிவுக்கு போதுமான ஆதாரங்களைக் குறிக்கிறது.
எத்திலீன் ஆக்சைடு நீண்ட நேரம் வெளிப்படுவதால் கண்கள், தோல், மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல்களில் எரிச்சல் ஏற்படுவதோடு, மூளை மற்றும் நரம்பு மண்டலத்திலும் பாதிப்பு ஏற்படும். யுனைடெட் ஸ்டேட்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (EPA) படி, எத்திலீன் ஆக்சைடு வெளிப்பாடு பெண்களுக்கு லிம்பாய்டு புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஃபர்ஸ்ட் போஸ்ட் தெரிவித்துள்ளது.
டெல்லியின் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனைகளைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் கனிகா நரங் கூறியதாவது, “எத்திலீன் ஆக்சைடு கொண்ட மசாலாப் பொருட்கள், பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படும், காலப்போக்கில் நாள்பட்ட வெளிப்பாட்டிற்கு வழிவகுக்கும். இந்த நாள்பட்ட வெளிப்பாடு லுகேமியா, வயிற்று புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற புற்றுநோய்களின் அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.