fbpx

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் வேறு எந்த நாட்டில் தங்கத்தின் விலை மிக குறைவு..? இவ்வளவு பணம் வித்தியாசமா..?

தங்கம் என்பது பல நூறாண்டுகளாகவே பாதுகாப்பான மற்றும் விருப்பமான முதலீடாக பார்க்கப்படுகிறது. இன்றும் கூட தங்கத்தில் முதலீடு செய்யவே பலரும் விரும்புகின்றனர். பல தசாப்தங்களாக உலகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. தசரா மற்றும் தீபாவளி போன்ற சிறப்புப் பண்டிகைகளிலும் தங்கம் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுவாக பண்டிகைக் காலங்களில் தங்கத்தின் விலை உயரும். இந்நிலையில், இந்தியாவை விட மலிவான விலையில் தங்கம் விற்பனை செய்யப்படும் சில நாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தோனேசியா: இந்தோனேசியா நாட்டின் பணத்தின் படி, அங்கு 4 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1,330,266 என்ற விலைக்கு கிடைக்கிறது. இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.77,700 ஆக இருந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே 10 கிராம் தங்கத்தில் ரூ.5,820 விலை வித்தியாசம் உள்ளது.

மலாவி: மலாவி ஒரு கிழக்கு ஆப்பிரிக்க நாடு. அங்கு 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1,482,660.70 MWK (மலாவியன் குவாச்சா) ஆக இருந்தது. அதாவது 10 கிராமுக்கு ரூ.72,030. இந்தியாவின் இன்றைய 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.77,700-க்கு ஒப்பிடும்போது, ​​10 கிராமுக்கு ரூ.5,670 வித்தியாசம் உள்ளது.

ஹாங்காங்: இங்கு 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு HKD 665 அல்லது 10 கிராமுக்கு ரூ.72,050 ஆக இருந்தது. இந்தியாவில் தற்போது 10 கிராமுக்கு ரூ.77,700 ஆக இருக்கும் நிலையில், 10 கிராமுக்கு ரூ.5,650 விலை வித்தியாசம் உள்ளது.

கம்போடியா: கம்போடியா தரமான தங்கத்திற்கு பெயர் பெற்ற நாடாகும். இங்கு 24 காரட் தங்கத்தின் விலை இந்தியாவை விட மிகவும் குறைவு. அக்டோபர் 12ஆம் தேதியன்று கம்போடியாவில் தங்கத்தின் விலை 347,378.43 KHR (கம்போடியன் ரியல்) அல்லது 10 கிராமுக்கு ரூ.72,060 ஆக இருந்தது.

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மற்ற மற்ற நாடுகளை விட ஒப்பிடும்போது துபாயில் தங்கம் விலை மலிவாக உள்ளது. மேலும், துபாயின் தங்கத்தின் மீதான வரியும் குறைவாக உள்ளது. இதனால் தரமான தங்கம் வாங்குவதற்கு துபாய் பாதுகாப்பான நாடாக கருதப்படுகிறது.

அக்டோபர் 12, 2024 அன்று, துபாயில் 24 காரட் தூய்மையான தங்கத்தின் விலை 10 கிராமுக்கு AED 3180.25 (சுமார் ரூ. 72,840) என விற்கப்பட்டது. இந்தியாவில் உள்ள 24 காரட் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில், 10 கிராமுக்கு ரூ.4,860 விலை வித்தியாசம் உள்ளது. இதன் மூலம் இந்தோனேஷியா, மலாவி, ஹாங்காங், கம்போடியா மற்றும் துபாய் போன்ற நாடுகள் இந்தியாவை விட மலிவான விலையில் தங்கத்தை வழங்குகின்றன.

Read More : கொரோனா காலகட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

English Summary

In this post we will see some countries where gold is sold at a cheaper price than India.

Chella

Next Post

மெட்டா ஊழியர்கள் மீண்டும் பணி நீக்கம்.. வாட்ஸ் அப், இன்ஸ்டா ஊழியர்களுக்கு வேலை காலி..!!

Thu Oct 17 , 2024
Meta job cuts hit WhatsApp, Instagram teams as tech layoffs drag on

You May Like