fbpx

#Leave: இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை? உங்க மாநிலமும் இருக்கா? முழு விவரம்..

இந்தியாவில் கடும் குளிர் நிலவி வருவதால், நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் குளிர்காலத்தில் மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பள்ளி நேரத்தை மாற்றியுள்ளன. மாநிலங்களில் குளிர்கால விடுமுறை பெரும்பாலும் ஜனவரி நடுப்பகுதி வரை இருக்கும், ஆனால் கடுமையான குளிர்கால நிலை நீடித்தால் நீட்டிக்கப்படலாம். எந்தெந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பாப்போம்.

டெல்லி: குளிர்கால விடுமுறைக்காக தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரை மூடப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. கல்வி இயக்குனரகத்தின் உத்தரவின்படி ஜனவரி மாதம் குறிப்பிடப்பட்ட தேதிகளில் அனைத்து அரசுப் பள்ளிகளும் குளிர்கால விடுமுறைக்காக மூடப்படும் என்று மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேசம்: கடும் குளிர் காரணமாக லக்னோவில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 4 முதல் 7ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள குளிர் அலை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லக்னோவைத் தவிர, கோரக்ஜ்பூர், சீதாபூர், வாரணாசி போன்ற பல்வேறு மாவட்டங்களில் அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ஹரியானா: அரியானா அரசு பள்ளிக் கல்வி இயக்குனரகம், அனைத்து மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 2023 ஜனவரி 1 முதல் 15 வரை குளிர்கால விடுமுறை அறிவித்துள்ளது. இருப்பினும், போர்டு தேர்வுகள் காரணமாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 10 முதல் 2 மணி வரை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளது.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை அரசு நீட்டித்துள்ளது. பஞ்சாபில் ஜனவரி மாதம் 2ஆம் தேதி தோறக்கப்படவேண்டிய, அனைத்து அரசு, தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தற்போது ஜனவரி 9ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்: கடும் குளிர் காரணமாக ராஜஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் குளிர் அலைகளால் ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, ராஜஸ்தான் பள்ளிகளுக்கு 12 நாட்கள் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஜனவரி 7 வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு ஜனவரி 8-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பீகார்: பாட்னாவில் உள்ள பள்ளிகள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 2 முதல் ஜனவரி 7, 2023 வரை விடுமுறை அளிக்கப்படும். பள்ளிகளை மூடுவதற்கான இந்த உத்தரவு அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். வானிலை சீரடையவில்லை என்றால், விடுமுறை காலத்தை மேலும் நீட்டிக்க முடியும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர்: நவம்பர் மாதம் குளிர்காலம் தொடங்குவதைக் கருத்தில் கொண்டு பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று மாத குளிர்கால விடுமுறையை ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 28, 2023 அன்று மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகள் அந்தந்த பள்ளிகளில் பிப்ரவரி 20, 2023 அன்று அறிக்கை அளிக்க வேண்டும்.

Kathir

Next Post

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? அப்படினா இதை பண்ணுங்க..!! தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு

Fri Jan 6 , 2023
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? இல்லையா? என்பதை தேர்தல் துறையின் இணையதளம் மூலமாக மக்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் போன்ற பணிகளுக்கு இணையதளம் மூலமாகவும் கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் […]

You May Like