fbpx

“உங்களுக்கு மட்டும் குரல் கேட்குதா.?, மன பிரம்மை இருக்கா.?” இந்த வைட்டமின் குறைபாடு கூட காரணமாக இருக்கலாம்.!

ஹாலுசினேசன் என்பது நமது புலன்கள் மற்றும் நிகழ்வுகளின் தவறான கருத்தாகும். இது மனதின் மாயத் தோற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இல்லாத ஒரு விஷயம் இருப்பது போன்று தோன்றுவது தான் இந்த மாயத்தோற்றம். இது பெரும்பாலும் வேதியியல் எதிர்வினைகள் அல்லது மூளையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களால் நிகழ்கிறது.

பொதுவாக ஹாலுசினேசன் ஒருவருக்கு தூக்கத்தில் நடப்பது அல்லது கனவு காண்பது போன்ற சாதாரண நிகழ்வுகளாக இருந்தாலும் பலருக்கு மிகக் கடுமையான மனநோய் மற்றும் மன அழுத்த பிரச்சனைகள் உருவாக காரணமாக இருக்கிறது. இதன் தீவிரமான பாதிப்பு மனச்சோர்வு, பதட்டம், மனநோய், டிமென்ஷியா மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது.

இந்த பாதிப்புகள் தீவிரமடைய வைட்டமின் பி12 குறைபாடு காரணம் என மூளை மற்றும் நரம்பியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பி 12 வைட்டமின் குறைவாக இருப்பதால் கார்பன் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இது மூலையில் இருக்கக்கூடிய மரபணுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக ஃபோலேட் வளர்சிதை மாற்றம் பாதிப்படைகிறது. இவையே மன அழுத்தம் மற்றும் மனநோய் போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

இந்த வைட்டமின் பி12 குறைபாடு தூக்கமின்மை, பலகீனம், பிரம்மை ஏற்படுதல், குரல்கள் கேட்பது மற்றும் காட்சி மாயைகள் போன்றவும் காரணமாக அமைகிறது. இது போன்ற குறைபாடுகளை ஆரம்பத்தில் கண்டறிந்து அவற்றிற்கு மருத்துவம் செய்வதன் மூலமாக தீவிரமான மன நோயிலிருந்து ஒருவரை காத்துக் கொள்ள முடியும். வைட்டமின் பி12 மனிதனின் மனநல ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த வைட்டமின் பி2 இறைச்சி, கடல் உணவுகள், பால், பால் சார்ந்த பொருட்கள் மற்றும் முட்டை ஆகியவற்றில் நிறைந்து இருக்கிறது.

Next Post

அடி‌தூள்...! திங்கள் தோறும் ரூ.4,000 உதவித் தொகை வழங்கும் திட்டம்...! தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு...!

Fri Dec 1 , 2023
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என நான்காயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித் தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் […]

You May Like