பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறோம். அதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பெற்றுள்ளது. அந்த வகையில், இந்து சாஸ்திரத்தில் சிவப்பு நிற கயிறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதே கயிறு கட்டுவதற்கான காரணம். சாஸ்திரங்களின்படி, சிவப்பு கயிறு கட்டுவது தெய்வங்களின் ஆசீர்வாதத்தை நமக்கு தருகிறது. இருப்பினும், ஜோதிட சாஸ்திரத்தின் படி, சிலருக்கு சிவப்பு கயிறு கட்டுவது பாதுகாப்பை விட தீங்கு விளைவிக்குமாம். சில ராசிக்காரர்கள் சிவப்பு நிற கயிறை ஒருபோதும் கட்டவே கூடாது. அதற்குப் பதிலாக மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு கருப்பு நிற கயிறை கட்டலாம். பூஜையில் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், சனி தேவனால் சில ராசிக்காரர்களுக்கு சிவப்பு கயிறு கட்டுவது நல்ல பலன்கள் அல்ல. அதாவது கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சிவப்பு கயிறைக் கட்டக் கூடாது. ஏனென்றால், மீனம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி சனி பகவான். சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் கையில் அல்லது கழுத்தில் சிவப்பு கயிறு கட்டினால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவார்கள். அதனால் வாழ்வில் அடிக்கடி சிக்கல்கள் மற்றும் துன்பங்கள் வந்துக்கொண்டே இருக்கும். இது தவிர மகர ராசிக்காரர்களும் சிவப்பு கயிறுக் கட்டக்கூடாது.
ஆனால் மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் சிவப்பு நிற கயிறு கட்டினால் அது மிகவும் மங்களகரமானது. எதிர்மறை ஆற்றலில் இருந்து அவர்களைப் பாதுகாத்து வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தருகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும்.
Read More : ஒரு மாதம் போதும்..!! இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா கொலஸ்ட்ரால் டக்குன்னு குறைஞ்சிடும்..!! அதுவும் இயற்கையான முறையில்..!!