fbpx

முதல் வாரமே அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது. இதற்கிடையே, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைவதும் பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலையும் குறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த 3 நாட்களாக மீண்டும் தங்கம் விலை உயர்ந்ததால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். செப்டம்பர் மாதம் நேற்று தொடங்கிய நிலையில், நேற்றைய தினம் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ. 6,695க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ. 53,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 2ஆம் தேதி) மீண்டும் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.25 குறைந்து, ரூ.6,670க்கும், ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ. 53,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.5464க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.91க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற பேருந்து.. கொந்தளித்து பள்ளி மாணவன் செய்த செயல்..!!

English Summary

While the price of gold fluctuated in August, the price of gold has come down drastically since the beginning of September.

Next Post

உஷார்..!! செல்போன் வெடித்து சிதறி சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!! சார்ஜ் போட்டபடி பயன்படுத்தியதால் விபரீதம்..!!

Mon Sep 2 , 2024
Tragedy happened to the boy when the cell phone exploded

You May Like