fbpx

தவெக கொடி அறிமுக விழாவில் எழுந்த சர்ச்சை.. ஃபைன் கட்டிய தவெக தலைவர் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக வெளியீட்டு விழாவிற்கு வந்த விஜய் கார் மீது அபராதம் நிலுவையில் உள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், தற்போது அந்த அபராத தொகையை விஜய் கட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) விஜய் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கீழும் சிகப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் உள்ள அந்த கொடியில் வாகை பூவும், 2 யானைகளும் இடம்பெற்றிருந்தனர். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலும் வெளியானது. பாடலாசிரியர் விவேக வரியில், தமன் இசையில் இந்த பாடல் உருவானது.

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 200க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சிக்கு விஜய் TN 37 DR 1111 என்ற பதிவு எண் கொண்ட இனோவா காரில் வந்திருந்தார். இந்த வாகனம் கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஆகும். மேலும், இந்த வாகனம் சென்னையில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வாகனம் மீது 4 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக பரிவாகன் செயலியில் இந்த கார் குறித்து ஆய்வு செய்த போது, இதுவரை 4,700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு 200 ரூபாய் மட்டுமே அபராதம் செலுத்தப்பட்டு, 4,500 ரூபாய் அபராதம் நிலுவையில் உள்ளது என்பதும், மாசு கட்டுப்பாட்டு வாரிய தரச் சான்றிதழ் தேதியும் கடந்த ஆண்டு மே மாதமே முடிந்து விட்டதாகவும் Screen Record ஒன்று வைரலானது.. அபராத தொகை நிலுவையில் உள்ள நிலையில், அந்த காரில் விஜய் பயணித்துள்ளார். இச்செய்தி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அபராத தொகையை செலுத்த அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Read more ; “தமிழன் கொடி பறக்கும் நேரம் இது..!!” வேற லெவல் வெறித்தனம்.. தெறிக்க விடும் விஜய் கட்சி பாடல்..!!

English Summary

While there were reports that a fine was pending on Vijay’s car which came to launch the flag of Tamil Nadu Vetri Kazhagam, Vijay has now paid the fine.

Next Post

பாலியல் தொல்லை கொடுத்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி..!! அதிரவைக்கும் பின்னணி..

Thu Aug 22 , 2024
In Chennai, a cleaning lady strangled her husband with a rope to death

You May Like