fbpx

அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை..!! வார்னிங் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”இன்று முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

25.05.2023 முதல் 27.05.2023 வரை மன்னார் வளைகுடா மற்றும் தமிழக – ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் 26.05.2023 மற்றும் 27.05.2023ஆம் தேதிகளில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்தியாவில் மறுபடியும் 1000 ரூபாய் நோட்டுக்களா…..? ரிசர்வ் வங்கி ஆளுநர் கொடுத்த புதிய விளக்கம்….!

Tue May 23 , 2023
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி தலைமை அறிவித்தது இந்த நிலையில் நாளை முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரே சமயத்தில் 20,000 ரூபாய் வரையில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிதாக 1000 ரூபாய் நோட்டுகள் […]
மக்களே அடுத்த ஷாக் நியூஸ்..!! மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு? ரிசர்வ் வங்கி அதிரடி..!!

You May Like