fbpx

’எப்போது பார்த்தாலும் வெள்ளை டீ சர்ட்’..!! என்ன காரணம்..? ராகுல் காந்தி சொன்ன நச் பதில்..!!

எப்போதும் ஏன் வெள்ளை டீ சர்ட் போடுகிறீர்கள் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தியை எப்போது பார்த்தாலும் ஒரு மாதிரி தான் இருப்பார். அதே வெள்ளை டீசர்ட். எளிமையான ஒரு பேண்ட். சுறுசுறுப்பான நடை. இது தான் 53 வயதான காங்கிரஸின் ராகுல் காந்தியின் அடையாளம். இப்படி பெரும்பாலான நேரங்களில் ராகுல் காந்தி எப்போதும் வெள்ளை டீ சர்ட் தான் அணிந்திருப்பார். இதற்கிடையே, கர்நாடகாவில் பிரச்சாரத்தின் போது எப்போதும் ஏன் வெள்ளை டீ-சர்ட் அணிகிறார் என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

இதற்கு பதில் கூறிய அவர், “இதற்குக் காரணம் வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமை தான். நான் ஆடைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. அதில் எளிமையாக இருக்கவே விரும்புகிறேன்” என்றார். கர்நாடக பிரச்சாரத்திற்காகக் காங்கிரஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் ராகுல் காந்தி நேர்காணல் செய்வது போல இருக்கிறது. அப்போது ராகுல் காந்தி இரு தலைவர்களிடமும் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார். அதற்கு அவர்களும் கேஸ்வலாக பதிலளிக்கின்றனர். அப்போது தான் வெள்ளை டீ சர்ட் கேள்விக்கு ராகுல் காந்தி இந்த பதிலை அளித்தார்.

மேலும், ராகுல் காந்தியிடம் பிரச்சாரத்தில் உங்களுக்கு எது பிடிக்கும் என அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு ராகுல், “அது முடியும் தருணம் தான். என்னைப் பொறுத்தவரை, இந்த பிரச்சாரம் கிட்டத்தட்ட 70 நாட்களாக நடந்து வருகிறது. பாரத் ஜோடோ யாத்ரா ஒரு பிரச்சாரம் அல்ல. ஆனால், இது இதை விட கடினமாக இருந்தது. இடைவிடாமல் சென்று கொண்டே இருந்தோம். இப்படி நான் நீண்ட காலமே மக்களைச் சந்தித்து வருகிறேன். நாட்டிற்கு என்ன தேவை என்பதை இவை தான் நமக்கு உணர்த்தும்” என்றார்.

Read More : பிளஸ் 2-வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு..!! கவலைய விடுங்க..!! இந்த தேர்வில் பாஸ் ஆகிறலாம்..!!

Chella

Next Post

ஆமா, அது தேஜஸ்வி சூர்யாவா? தேஜஸ்வி யாதவா? பிரச்சாரத்தில் கன்பியூஸ் ஆன கங்கனா!!

Mon May 6 , 2024
சமீப காலமாகத் பா.ஜ.க ஆதரவு கருத்துகளைத் தெரிவித்துவந்த பாலிவுட் நடிகையும், பா.ஜ.க வேட்பாளருமான கங்கனா ரணாவத், தேஜஸ்வி யாதவை விமர்சிப்பதாகத் தனது கட்சியின் சக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை விமர்சித்திருக்கிறார். இமாசலப் பிரதேசத்தின் மண்டி மக்களவை தொகுதியில்  பா.ஜ.க. வேட்பாளராக நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். ஆரம்பத்திலிருந்தே அவரது செயல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கர்நாடகாவில் நேற்று பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மக்களவை […]

You May Like