fbpx

’வெளுத்து வாங்கப்போகும் மழை’..!! ஒரு சில இடங்களில்..!! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு..!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில், ஒரு சில இடங்களில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இருப்பினும், பிற மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ஜூலை 30 வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். வலுவான தரைக்காற்று, மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் வீசலாம். இதேபோல, ஆகஸ்ட் 3 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More :

English Summary

Tamil Nadu, Puducherry and Karaikal, a few places are likely to receive moderate rain till August 3, according to the Chennai Meteorological Department.

Chella

Next Post

ஒரே நாளில் 3 அரசியல் படுகொலை.. சட்டம் - ஒழுங்கு காக்க முடியலன்னா திமுக அரசு பதவி விலக வேண்டும்...!

Mon Jul 29 , 2024
3 political assassinations in one day.. DMK government should resign

You May Like