fbpx

”நீ யாருடா அவன் கூட படு** கூடாதுனு சொல்ல”..!! கணவனை ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக் கட்டிய மனைவி..!!

நாமக்கல் மாவட்டம் செல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (37). இவரது மனைவி பிரேமா (35). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி அதிகாலை பிரேமா காது வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, அவரை பெரியசாமி மோகனூர் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், பொய்யேரிக்கரை பகுதியில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவர் பெரியசாமி இறந்ததாக பிரேமா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அந்த விபத்தில் பிரேமாவுக்கு சிறுகாயம் கூட ஏற்படவில்லை. இதனால், போலீசுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, பிரேமாவின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, தருமபுரி மாவட்டம் நாட்ராம்பள்ளியைச் சேர்ந்த கேசவன் (எ) நந்திகேசவன் (28) என்பவருடன் பிரேமா அடிக்கடி பேசியதும், அவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தீவிரமாக விசாரித்த போது, பிரேமா பேக்கரியில் வேலை செய்த போது, நந்திகேசவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விவகாரம் கணவர் பெரியசாமிக்கு தெரியவந்ததும், பிரேமாவை கண்டித்துள்ளார். இதையடுத்து, வேலைக்கும் செல்ல முடியாமல், நந்திகேசவனையும் பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார் பிரேமா. எனவே, தங்களது கள்ள உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொலை செய்ய திட்டமிட்டு, காது வலி என நாடகமாடி பைக்கில் அழைத்துச் சென்றபோது கணவரை தீர்த்து கட்டியது விசாரணையில் அம்பலமானது.

இந்த கொலை வழக்கில் மனைவி பிரேமா, கள்ளக்காதலன் நந்திகேசவன் மற்றும் உடந்தையாக இருந்த தனுஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது..! இதில் 3 குழந்தைகள் கண்காணிப்பில் உள்ளது...

Tue Aug 29 , 2023
ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தில் கிரண் கன்வார் என்ற 28 வயதுடைய பெண் ஒருவர், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து காலை 6 மணியளவில் அகிரண் கன்வார் தனது நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். பிறந்த நான்கு குழந்தைகளில் 3 குழந்தைகளின் எடை 1 கிலோ […]

You May Like