fbpx

தாஜ்மஹாலை கட்டியது யார் ? ஷாஜகான்தான் கட்டினாரா? உச்சநீதிமன்றத்தில் மனு..

தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்தான் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவே யார் தாஜ்மஹாலை கட்டியது என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள அழகான காதல் சின்னம் தாஜ்மஹால். ஷாஜகான் என்ற மன்னர் தனது மனைவி மும்தாஜ் மீது வைத்திருந்த அளவுகடந்த காதலால் தாஜ்மஹாலை கட்டியதாக நாம் படித்து வருகின்றோம். இந்நிலையில் ஷாஜகான்தான் தாஜ்மஹாலை கட்டினார் என்பதற்கான ஆதாரம் அறிவியல் பூர்வமாக இல்லை.

எனவே உண்மை கண்டறியும் குழுவை அமைத்து , உண்மையை கண்டறிந்து சர்ச்சைக்குரிய இந்த கேள்விக்கு பதில் அறிவிக்க வேண்டும் என ரஜ்னீஷ் என்ற மருத்துவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 1631 முதல் 1653 வரை 22  ஆண்டுகளுக்கும் மேலாக முகலாயப் பேரரசர் ஷாஜகான் கட்டியதாக கூறப்படுகின்றது. ஆனால் அறிவியில் பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதித்துறையால் இது தீர்க்கப்படாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் பற்றிய முழு ஆதாரத்தை ஆர்.டி.ஐ துறையில் ரஜ்னீஷ் பெற்றார் ஆனால் இந்த பதிலில் அவருக்கு திருப்தியில்லை . எனவே உயர்நீதிமன்றத்தின் முன் , மனுதாரர் தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளையும் திறந்து ஆய்வுக்காக பயன்படுத்த வேண்டும் என கோரியிருந்தார். மேலும்  ஏ.எஸ்.ஐ இது தொடர்பான வரலாற்றை சரியாக கூறவில்லை எனவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

19(1)(a) சட்டப்படி இதன்கீழ் தகவல் பெறும் உரிமை சட்டம் என்பது அடிப்படை உரிமையின் ஒருஅம்சம். அதே நேரத்தில் எந்த அறிவியல் காரணமும் இல்லாமல் ஆதாரம் இல்லாமல் தகவல் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால் இந்த சட்டத்திற்கு புறம்பானது . ஆகும்.

Next Post

இந்தியாவில் அக்டோபர் 1 முதல் நீங்கள் சந்திக்கப் போகும் முக்கிய மாற்றங்கள்..!!

Sat Oct 1 , 2022
அக்டோபர் 1 இன்று முதல் இந்தியாவில் பல பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை சாமானிய மக்களின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வாகனங்களின் விலை உயர்வு, டெல்லியில் மின்சார மானியம், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், அடல் பென்ஷன் திட்டம், மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளின் விதிகள் என்று பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில்‌ முக்கியமாக‌ 10 மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் […]

You May Like