fbpx

’மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது’..? விளாசிய பாஜக நிர்வாகி சவுதாமணி..!!

மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது என பாஜக நிர்வாகி சவுதாமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

10, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பரிசுப் பொருட்களை வழங்கினார். அந்நிகழ்ச்சியில், எல்லா மாணவ, மாணவிகளையும், அவர்களுடைய பெற்றோர்களையும் தனது சகோதர சகோதரிகளாக நினைத்து விஜய் தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதேபோல், ஒரு மாணவி மீது கை போட்டபோது அந்த மாணவி ஏதோ சொல்ல விஜய்க்கு அது புரியவில்லை.

அப்போது அந்த மாணவியே விஜய்யின் கையை தோளின் மீதிருந்து எடுத்துவிட்டு கைகளை கோர்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த தோளில் கை போட்ட சம்பவமும் அந்த மாணவி எடுத்துவிட்டதும் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாஜக நிர்வாகி சவுதாமணி தனது எக்ஸ் தளத்தில், ”மாணவியிடம் பாடம் கற்றுக் கொண்ட நடிகர் விஜய். மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க யார் கொடுத்த உரிமை? ஆட்டிப்படைக்கும் விளம்பர மோகம்! அப்பட்டமான விதிமீறல்! பெண் குழந்தைகள் வளர்ந்து விட்டால், தந்தை கூட தயங்கியே நிற்பார்? யார் இவர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சவுதாமணி சொல்வதை போல் வயதுக்கு வந்துவிட்டால், அந்த பெண்ணை அவரது தந்தையோ, அண்ணனோ தம்பியோ தொடவே கூடாது என்பதுதான் பெரியவர்கள் சொல்வது. தந்தைக்கு அவர் குழந்தையாகவே இருந்தாலும், தொட்டு பேசாதே என்றுதான் பாட்டிமார்கள் கண்டித்து வந்தனர். ஆனால், இப்போது சகஜமாகிவிட்டது. அன்பின் பால் செய்வது! அதிலும் இந்த விவகாரத்தில் தோளில் இருந்து கையை எடுக்க சொன்னாலும் அவர் கைகளை அந்த மாணவி பிடித்துக் கொண்டார். அது அன்பின் வெளிப்பாடு. இருப்பினும் தெரியாத பெண் தோள் மீது கை போடுவது தவறு தான் என்றும் ஒரு கருத்து உலவுகிறது.

Read More : ஏற்கனவே 4 பெண்களுடன் கள்ளத்தொடர்பு..!! ஐந்தவதாக 17 வயது சிறுமியுடன் ஓட்டம்..!! திருப்பத்தூரில் பரபரப்பு..!!

English Summary

BJP executive Soudamani has questioned who gave Vijay the right to pose with his hand on the student’s shoulder.

Chella

Next Post

’அரசு விற்கும் மதுவில் கிக் இல்லை’..!! ’உழைப்பவர்களின் அசதியை போக்க மது தேவை’..!! அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு..!!

Sat Jun 29 , 2024
Duraimurugan's statement that government-sold Tasmac liquor does not have the necessary kick, and the goods sold by the government are turning into soft drinks, has created a sensation.

You May Like