fbpx

அதிமுக தலைமை அலுவலக சாவி யாருக்கு? உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு..! ஈபிஎஸ் அதிரடி பதில்..!

அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது கட்சி அலுவலகத்தின் அதிகார உரிமையைக் கோர முடியாது.

அதிமுக தலைமை அலுவலக சாவி யாருக்கு? உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு..! ஈபிஎஸ் அதிரடி பதில்..!

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை தன் வசம் ஒப்படைக்கக் கோருவதில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளார். கையாடல் செய்த ஒருவரிடம் அலுவலகச் சாவியை ஒப்படைக்கக் கூடாது. அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கட்சிக்கு எதிராக நடக்கும் ஒருவர் அலுவலக நிர்வாக உரிமையை கோர முடியாது” என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Chella

Next Post

கவனம்.. மின்கட்டணம் செலுத்தவில்லை என்று மெசேஜ் வருகிறதா..? அதை கிளிக் செய்தால் வங்கிக் கணக்கு காலியாகலாம்..

Mon Sep 12 , 2022
இந்தியாவில் சைபர் கிரைம் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 4,047 ஆன்லைன் வங்கி மோசடி வழக்குகள், 2,160 ஏடிஎம் மோசடி வழக்குகள், 1,194 கிரெடிட்/டெபிட் கார்டு மோசடி வழக்குகள் மற்றும் 1,093 OTP மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதாக என்சிஆர்பி தெரிவித்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மற்றொரு மோசடி அரங்கேறி உள்ளது.. மின்சாரக் கட்டணம் நிலுவையில் இருப்பதாகவும், கொடுக்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அதைச் […]

You May Like