fbpx

நெல்லை, தென்காசி தொகுதிகளில் யார் போட்டி..? வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர்..!!

நெல்லை தொகுதியில் பா.சத்யா, தென்காசி தொகுதியில் மயிலராஜன் ஆகியோர் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நெல்லை, தென்காசி மக்களவை தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. முன்னதாக, தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

டீன் ஏஜ் பயனர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!! இனி பெற்றோரின் அனுமதி அவசியம்..!! மெட்டா நிறுவனம் அதிரடி..!!

Sat Jan 27 , 2024
இன்ஸ்டாகிராம் மற்றும் மெசேஞ்சரில் பதின்ம வயதினரின் பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகளை மெட்டா நிறுவனம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சமூக ஊடக பயன்பாடு என்பது நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால், அனைவரும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, பதின்ம வயதினரின் சமூக ஊடக பயன்பாடு குறித்த கவலைகள் உலகம் முழுக்கவே பெற்றோர் மற்றும் பெரியவர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இவர்களின் கோரிக்கைக்கு அவ்வப்போது சமூக ஊடக நிறுவனங்கள் செவிசாய்ப்பதும் உண்டு. […]

You May Like