fbpx

தமிழக பாஜக தலைவர் யார்..? சென்னை வருகிறார் அமித்ஷா..!! சஸ்பென்ஸ் உடையுமா..? எதிர்பார்ப்பில் தொண்டர்கள்..!!

அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நாளை (ஏப்ரல் 10) சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ளது. ஆனால், இப்போதிலிருந்தே அரசியல் களம் சூடாகி வருகிறது. இதில் முக்கிய நகர்வாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இது 2026 தேர்தலில் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் நியமனம் குறித்த பேச்சுக்கள் கடந்த இரண்டு வாரங்களாகவே பேசுபொருளாகி உள்ளது. தற்போது தலைவராக இருக்கும் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கப்படுமா..? அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஏப்.10) சென்னை வரவுள்ளதாகவும், அவர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (ஏப்ரல் 11) அன்று பல்வேறு கட்சி நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளதாகவும், அமித் ஷாவின் இந்த பயணத்தின் போது தமிழக பாஜக தலைவர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Read More : அடுத்தடுத்து அதிர்ச்சி மரணம்..!! ‘லொள்ளு சபா’ நடிகர் ஆண்டனி காலமானார்..!! ரசிகர்கள் இரங்கல்..!!

English Summary

Amidst expectations about who will be the next BJP state president, it has been reported that Union Home Minister and senior BJP leader Amit Shah will be arriving in Chennai tomorrow (April 10).

Chella

Next Post

ZERO Oil: எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்த்தால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும்..? நிபுணர்கள் எச்சரிக்கை!

Wed Apr 9 , 2025
Oil Free Diet: Do you know what happens if you eat oil-free food for a long time?

You May Like