fbpx

“மிக்ஜாம்” என்று புயலுக்கு பெயர் வைத்தது யார்..! காரணம் என்ன..?

சென்னையில் உள்ள மக்களுக்கு தற்போது தெளிவாக பரிச்சயம் ஆகியுள்ள பெயர்தான் “மிக்ஜாம்”. வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ள புயலுக்கு வானிலை ஆய்வு மையம் சூட்டப்படும் பெயர் தான் இது. பொதுவாக புயல் என்றால் நம் நினைவுக்கு வரும் பெயர்கள் வர்தா புயல், கஜா புயல், தானே புயல் ஆகியவை ஆகும், அவை ஏற்படுத்திய சேதங்களும் இன்று வரை மறக்க முடியாதவையாக இருக்கிறது.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்களும் ஏற்படலாம். சில சமயத்தில் ஒரே புயல் ஒரு வாரம் கூட இருக்கலாம், எனவே குழப்பங்களை தவிர்க்க பெயர்கள் வைக்கப்படுகின்றன. இந்த புயல்களுக்கு உலக வானிலை அமைப்பான WMO மற்றும் ESCAP எனப்படும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் பெயர்களை சூட்டுகின்றன.

பொதுவாக இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு எழுத்து வரிசைப்படி, ஆண் மற்றும் பெண் பெயர்கள் மாறி மாறி வைக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியை ஒட்டிய நாடுகள், கடந்த 2000 ஆண்டு முதல் புயல்களுக்கு பெயர் வைப்பதில் புதிய வழிமுறைகளை பின்பற்ற தொடங்கின. நாடுகள் வாரியாக எழுத்து வரிசைப்படி அந்த பெயர்கள் பட்டியலிடப்படும். அதில் இருபாலின பெயர்களும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வங்கக்கடலில் அடுத்து உருவாகவுள்ள புயலுக்கு மிக்ஜாம் என்ற பெயரிடப்படுகிறது. இந்த “மிக்ஜாம்” பெயரை பரிந்துரைத்த நாடு மியான்மர். மிக்ஜாம் பெயரின் அர்த்தம் என்னவென்று பார்த்தால், மியான்மர் நாட்டின் chin state அதாவது மேற்கு பகுதியில் இருக்கக்கூடிய மாநிலம் தான் “சின்”. அந்த மாநிலத்தில் ஓடக்கூடிய ஆற்றின் பெயர் தான் “மிக்ஜாம்”, அந்த பெயரை தான் தற்போது அவர்கள் இந்த புயலுக்கு பரிந்துரைத்து இருக்கின்றனர்.

Kathir

Next Post

ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை பண்ணுவது எப்படி..? ஈசியான வழிமுறைகள் இதோ..!!

Sat Dec 2 , 2023
டிரைவிங் லைசென்ஸ் தொலைத்தவர்கள் அதை திரும்ப பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைந்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே அதை ஆன்லைனில் எளிதில் பெற முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். 18 வயதுக்கு மேற்பட்டோர் வாகனங்கள் ஒட்டுவதற்கு அனுமதி அளித்திருக்கும் இந்திய சட்டம், அவர்கள் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. […]

You May Like