fbpx

UK அரியணை யாருக்கு?. தோல்வி விளிம்பில் ரிஷி சுனக்!. வரலாற்று வெற்றியை பெறும் தொழிலாளர் கட்சி!

UK Elections: இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன. தமிழகத்தில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களுக்கும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். பிரதமர் ரிஷி சுனக் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். நேற்று இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுறது. இதையடுத்து வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

அந்தவகையில், இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பிரதம மந்திரி ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ்கள் 14 ஆண்டுகளில் மிக மோசமான தோல்வியை சந்திக்கப் போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதாவது தொழிலாளர் கட்சி 410 இடங்களை பெறும் என்றும் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ்கள் 131 இடங்களை மட்டுமே பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: ரூ.29 பாரத் அரிசியின் விற்பனை நிறுத்தம்!. ஆன்லைனிலும் கிடைக்காது!.

English Summary

Who owns the UK throne? Rishi Sunak on the brink of failure!. The Labor Party will win a historic victory!

Kokila

Next Post

தேசிய நெடுஞ்சாலைகளில் நீர் தேங்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி...! மத்திய அரசு நடவடிக்கை

Fri Jul 5 , 2024
An end to the problem of water logging on national highways

You May Like