ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள், மூக்குவழி தடுப்பு மருந்து செலுத்த தேவையில்லை என்று கோவிட் பணிக்குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
அண்டை நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியாவில் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பாரத் பையோடெக்கின் மூக்குவழி செலுத்தும் இன்கோவக் எனும் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே 3-வதாக இந்த மூக்குவழி தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஏற்கனவே, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள தேவையில்லை என கோவிட் பணிக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நோய் எதிர்ப்பு ஆன்டிஜென் எடுத்துக் கொண்டவர்கள் மீண்டும் குறிப்பிட்ட வகை ஆன்டிஜென் எடுத்துக்கொள்ளும்போது உடல் ஒத்துழைக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.