fbpx

திரிபுராவில் ஆட்சியை பிடிப்பது யார்..? விறுவிறுப்புடன் வாக்களிக்கும் மக்கள்..!! பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறும் நிலையில், இதற்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

கம்யூனிஸ்ட்களின் கோட்டையாகக் கருதப்பட்ட திரிபுராவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவுக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீவிர முனைப்பில் இருந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 28 லட்சத்து 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் வாக்கு அளிக்க 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,100 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளளன. 28 மிகவும் பதற்றமானவை. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று வாக்குப்பதிவு முடிந்தாலும், தேர்தல் முடிவுக்காக 2 வார காலம் காத்திருக்க வேண்டும். நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுடன் சேர்த்துத்தான் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி நடைபெறுகிறது.

Chella

Next Post

சென்னையில் 15 ஆண்டுகளுக்கு பின்..!! இந்தியா - நேபால் அணிகள் மோதிய போட்டி சமன்..!!

Thu Feb 16 , 2023
சென்னையில் நடைபெற்ற இந்தியா – நேபால் மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச மகளிர் கால்பந்து போட்டி சமனில் முடிந்தது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இந்தியா – நேபால் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியான சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி செயல்பட்டார். போட்டி தொடங்கிய துவக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், முதல் பாதியில் இரண்டு அணிகளுமே எந்த […]

You May Like