உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கும் இடையே நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இதனால், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதி மேற்குறிப்பிட்ட 6 மாநிலங்களிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி ஜார்கண்டின் டும்ரி மற்றும் தன்பூர் தொகுதிகள், உத்தரகாண்டின் பாகேஷ்வர்தொகுதி, உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி தொகுதி, திரிபுராவில் உள்ள போக்ஸாநகர் ஆகிய 5 தொகுதிகளில் ஒருங்கிணைந்து இடைத்தேர்தலை சந்தித்தது.
மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரி தொகுதி மற்றும் கேரளா புதுப்பள்ளி தொகுதியில் இந்தியா கூட்டணி தனித்து போட்டியிட்டது. இந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வாக்குப்பதிவு இன்று கால 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.