fbpx

ஐபிஎல் 2023 மகுடம் சூடப்போவது யார்?… சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்!… ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. சென்னை-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன.

ஐபிஎல் 16வது சீசன் நாளையுடன் (மே 28) முடிவடைகிறது. இந்த சீசனில் சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறின. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற, 2வது தகுதிப்போட்டியில் மும்பையும் குஜராத்தும் மோதின. இதில் சுப்மன் கில்லின் அதிரடியான ஆட்டத்தால் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.

அதன்படி, இன்று (மே 28) அகமதாபாத்தில் நடக்கும் ஃபைனலில் 4 முறை சாம்பியன் சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியன் குஜராத்தும் கோப்பையை வெல்லும் முனைப்பில் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன. பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து கூறியுள்ளனர். இதுகுறித்து பேசிய முகமது கைஃப், முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரு அணிகளுமே பலமான அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

ஃபைனல் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணி நிறைய முறை ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது. சிஎஸ்கே அணியில் ஒவ்வொரு வீரர் மீதும் அந்த அணி நிர்வாகம் நம்பிக்கை வைக்கும். கேப்டன் தோனியும் மிகச்சிறந்த கேப்டன் ஆவார். உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை தோனி என்று ஹர்பஜன் சிங் கூறினார். சிஎஸ்கே அணி தான் ஃபைனலில் ஜெயித்து கோப்பையை தூக்க வாய்ப்பிருப்பதாக இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

ஐபிஎல் 2023 பரிசுத் தொகை அறிவிப்பு!... எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு தெரியுமா?

Sun May 28 , 2023
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான பரிசுத் தொகை மும்பைக்கு ரூ.7 கோடி என்றும், லக்னோவிற்கு ரூ.6.5 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முதலாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டது. அந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. முதல் 2 சீசன்களாக வெற்றி பெற்ற அணிக்கு ரூ. 4.8 கோடியும், 2ஆவது இடம் பிடித்த அணிக்கு ரூ.2.4 கோடியும் பரிசுத் தொகையாக […]

You May Like