fbpx

Valentine Day 2025 : உலகின் முதல் காதல் கடிதம் இதுதான்.. எழுதியது யார் தெரியுமா? – சுவாரஸ்ய வரலாறு இதோ..

காதலர் வாரம் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கியது. காதலர் தின வாரத்தின் ஒவ்வொரு நாளும் காதலர்களுக்கு மிகவும் முக்கியமானது. காதலர் வாரம் பிப்ரவரி 7 ஆம் தேதி ரோஜா தினத்துடன் தொடங்கி பிப்ரவரி 14 வரை பரிசுகள் கொடுத்து கொண்டாடப்படுகிறது.. இந்த காதலர் தினத்தில், காதலர்கள் தங்கள் காதலை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துவார்கள்.

அன்பை வெளிப்படுத்துவதற்கான இனிமையான மற்றும் பழமையான வழி கடிதம் வழியாகும். இன்றைய தலைமுறையில் காதலர்கள் கடிதம் எழுதி அன்பை பறிமாறுவது மிகவும் அரிது. இந்த நிலையில், உலகின் முதல் காதல் கடிதம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். முதல் காதல் கடிதத்தைப் பற்றிப் பேசினால், அது இந்திய புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காதல் கடிதம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இது விதர்ப்ப நாட்டின் இளவரசி ருக்மணியால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எழுதப்பட்டது.

விதர்ப்ப தேசத்து இளவரசி ருக்மணி, கிருஷ்ணருக்கு எழுதியது தான் பிரபஞ்சத்தின் முதல் காதல் கடிதம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீமத் பகவத் கீதையின் 10வது அத்தியாயத்தில், இதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ருக்மணி தனது தோழி சுனந்தா மூலம் கிருஷ்ணருக்கு இந்தக் காதல் கடிதத்தை அனுப்பினார். கிருஷ்ணரின் குணங்களையும், துணிச்சலையும் பற்றி அறிந்த பிறகு, ருக்மிணி, கிருஷனரை பார்க்காமலேயே நேசிக்கத் தொடங்கினார்.

ஆனால் ருக்மிணியின் சகோதரர் அவளை தனது நண்பர் சிசுபாலனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். ஆனால் ருக்மிணி அவரை மணக்க விரும்பவில்லை. அதனால்தான் அவர் தனது அன்பின் செய்தியை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அனுப்பினார். மகாபாரதக் காலத்தைச் சேர்ந்த முதல் காதல் கடிதம் இது. இரண்டாவது எழுதப்பட்ட காதல் கடிதம் பண்டைய எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது விதவை ராணி அங்கேசெனாமுன் ஹிஜித் மன்னருக்கு எழுதியது. அதில் அவர் தனது மகன்களில் ஒருவரை எகிப்துக்கு அனுப்பி, ராணி அங்கெசெனாமுனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

Read more : ”என்னை சோதிக்காதீங்க”..!! செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுத்த ஆர்.பி.உதயகுமார்..!! பரபரப்பு வீடியோ வெளியீடு..!!

English Summary

Who wrote the world’s first love letter? Don’t miss this detail during the week of love

Next Post

'அதிமுகவில் நடப்பது அண்ணன் - தம்பி பிரச்சனை’..!! ’2026இல் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் CM’..!! பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ

Thu Feb 13 , 2025
Former Minister Sellur Raju has said that what is currently happening in the AIADMK is a brother-sister problem.

You May Like