fbpx

பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் திமுகவினர்.. இந்தி எது ஆங்கிலம் எது என்பது கூட தெரியல..!! – அண்ணாமலை கிண்டல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரயில் நிலையத்தில், இந்தி எழுத்துக்களுக்கு பதிலாக ஆங்கில எழுத்துக்களை திமுகவினர் அழித்த சம்பவத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், மும்மொழி கற்கும் வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன்? என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களே, கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கழகக் கண்மணிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன். அதில் அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மும்மொழி கற்கத் தடை இல்லை, ஆனால் நீங்கள் கற்கவேண்டும் என்றால் திமுகவினர் நடத்தும் CBSE அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுங்கள் என்கிறாரா திரு ஸ்டாலின்?

உங்கள் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மேலும், பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே” என பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/annamalai_k/status/1894290307857956867

Read more : தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும்..!! – மு.க.ஸ்டாலின் அழைப்பு

English Summary

Why are government school students denied the opportunity to learn trilingual?

Next Post

'தைரியம் இருந்தா இந்த இடத்துல கருப்பு பெயிண்ட் அடிங்க’..!! ’அட்ரஸை அமைச்சர்கள் கிட்ட கேளுங்க’..!! இறங்கி அடித்த அண்ணாமலை

Tue Feb 25 , 2025
Annamalai has said that the gang that is roaming around with cans of black paint should go straight to the Enforcement Directorate office and the Income Tax Department office.

You May Like