fbpx

நான் என்ன தீவிரவாதியா?… எதற்காக இத்தனை விசாரணை அமைப்புகள்!… மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி!

ஈடி, சிபிஐ, டெல்லி போலீஸ் அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கும் அளவுக்கு நான் மிகப்பெரிய தீவிரவாதியா என்று மோடி அரசிடம் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர் 5 முறை ஆஜராகவில்லை. மேலும் டெல்லி ஆட்சியை கலைக்க ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி லஞ்சம் கொடுக்க பா.ஜ முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் வீடு தேடி சென்று டெல்லி போலீசார் நோட்டீஸ் வழங்கினார்கள்.

இந்த நிலையில் டெல்லி துவாரகாவில் கட்டப்படும் பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய கெஜ்ரிவால் கூறியதாவது: கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ், சிபிஐ நோட்டீஸ், டெல்லி போலீஸ் நோட்டீஸ் என்று நீங்கள் செய்தித்தாள்களில் படித்துக் கொண்டிருப்பீர்கள். நான் மிகப்பெரிய தீவிரவாதி என்பது போல் எனக்கு எதிராக அனைத்து விசாரணை அமைப்புகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். நான் திருடன் என்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள், குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குபவர் திருடனா அல்லது அரசுப் பள்ளிகளை மூடுகிறவரா? என்று கேள்வி எழுப்பினார்.

Kokila

Next Post

இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் பண்ணுங்க..!! பெரிய ஆபத்து..!!

Fri Feb 9 , 2024
நிதி மோசடிகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக செப்டம்பர் 2022 மற்றும் ஜனவரி 2024 இடையே Google அதன் Play Store-இல் இருந்து 2,200-க்கும் மேற்பட்ட போலி கடன் செயலிகளை நீக்கியுள்ளது. பொய்யான கடன் செயலிகளை எதிர்த்து ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கே காரத் பதிலளித்தார். அதில், […]

You May Like