என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, பதிலளித்த அவர், “எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை ஏன் தவிர்த்தார் என செங்கோட்டையனிடம் கேளுங்கள். என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள். அதிமுகவில் நான் தலைவர் அல்ல; நான் சாதாரண தொண்டன். தனிப்பட்ட பிரச்சனைகளை இங்கு பேச வேண்டாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான். அங்குள்ளதுபோல் அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை. திமுகவினரை போல் அதிமுகவினர் அடிமை அல்ல. அதிமுகவினர் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். பட்ஜெட்டை பார்க்க அரசு ஏற்பாடு செய்த எல்.இ.டி. திரையில் சீமான் தான் தெரிந்தார்” என பேசினார்.