உதயநிதி ஸ்டாலின் கொசுவத்தி சுருள் புகைப்படத்தை பகிர்ந்தது சர்ச்சையான நிலையில், அதற்கு பாஜகவினர் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். பாஜகவினரை சீண்டும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொசுவத்தி சுருள் படத்தை சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அவரது பதிவு வேகமாக பகிரப்பட்ட நிலையில், கூடவே பதிவு தொடர்பான விவாதம் கிளம்பியது. அதேபோல் பாஜக ஆதரவாளர்களும் உதயநிதி ஸ்டாலினை சீண்டும் வகையில் கமெண்ட் செய்தனர். அதில், பாஜக பெண் ஆதரவாளர் ஒருவர், ’’உங்கள் பேண்ட்டினுள் என்ன நடக்கிறது என்பதை ஏன் புகைப்படம் எடுத்து போட்டீர்கள்? நீங்கள் வாயைத் திறக்கும்போது அது வித்தியாசமாகத் தெரிகிறது’’ என கிண்டலடித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘’என் பேண்ட்டினுள் என்ன நடக்கிறது என நீங்க ஏன் எட்டிப் பார்க்குறீங்க. அது நல்ல பழக்கம் கிடையாது’’ என குறிப்பிட்டு அந்த பாஜக பெண் ஆதரவாளரை பிளாக் செய்துள்ளார். உதயநிதியின் இந்த பதிலடியை திமுகவினர் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
