கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் மாநிலங்களுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சிட்யின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே. வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 34 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதே போல பாஜக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் திரை நட்சத்திரங்களுக்கு கணிசமான இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஹேமமாலினி, கேரள நடிகர் சுரேஷ் கோபி, ஹிந்தி நடிகர் ரவி கிஷன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் – விதீஷா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே ஆண்டனியின் மகன் அணில் ஆண்டனிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது பாஜக.
பல முக்கிய அமைச்சர்களின் பெயர்கள் பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் இடம்பெறவில்லை. மதிய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பெயரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் மாநிலங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அதன் படி, மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மனிதர்களை வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.