திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடைப்பேச்சு வீடியோவை குறிப்பிட்டு, நடிகை ராதிகா சரத்குமார் கோபத்துடன் பதிவிட்டுள்ளார். மேடைப்பேச்சுகளில் அநாகரீகமாக பேசியதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அவர் பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோரை குறிப்பிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அதனை குறிப்பிட்டு தற்போது ராதிகா சரத்குமார் ஆவேசமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவில், “ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே. அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்” என முதல்வர், திமுக, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.
Read More : பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! அதுவும் ’Work From Home’..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!