fbpx

’திமுக கூட்டணியில் ஏன் இணைந்தேன்’..? ’ஒரு சீட் கூட கேட்காதது ஏன்’..? கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம்..!!

மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இணைந்தது தொடர்பாக கமல்ஹாசன் கூறுகையில், “ஆரம்பத்தில் எனக்கு அரசியல் மீது வெறுப்பு இருந்தது. ஆனால், நல்ல விஷயங்களை அரசியலுக்கு வந்தால் மட்டுமே செய்ய முடியும் என்று நினைத்ததால் அரசியலுக்கு வந்தேன். நான் மக்கள் நீதி மய்ய கட்சியை தனித்துவமாக நடத்துவேன் என்று சொல்லிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்ததற்கு பலரும் என்னை விமர்சிக்கின்றனர். ஆனால், அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்கள் ஓரணியில் இணைந்திருக்கிறார்கள். தற்போதைய சூழலில் நாட்டில் ஒரு சக்தியானது மதங்களை பிளவுபடுத்த நினைக்கிறது. அதுவும் மனிதர்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் கடப்பாரையை வைத்து குத்தி பிளவு ஏற்படுத்துகின்றனர். அதற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று நினைத்து தான் திமுக கூட்டணியில் இணைந்தேன். நான் நினைத்திருந்தால் 3 அல்லது 4 சீட்டுகள் கேட்டிருக்க முடியும். ஆனால், கூட்டணி வலுவாக வேண்டும் என்பதால் அதை செய்யவில்லை. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு ராகுல்காந்தி பொருத்தமானவர் என்று நான் நினைக்கிறேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Read More : AI தொழில்நுட்பத்தால் அரசு ஊழியர்களுக்கும் ஆப்பு..!! 84% வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்..!!

Chella

Next Post

Ration | தமிழக ரேஷன் கடைகளில் UPI பரிவர்த்தனை இருக்கா..? இல்லையா..? குழப்பத்தில் பொதுமக்கள்..!!

Sat Mar 23 , 2024
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ பேமெண்ட் குறித்தான குழப்பங்கள் நிலவி வருகிறது. இது தொடர்பான அரசின் சமீபத்திய தகவல்களை இப்பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் வியாபார நிமித்தங்களுக்காக யுபிஐ பேமெண்ட் வழிமுறையை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதே போல், தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளிலும் UPI பேமெண்ட் செயல்பாடு கடந்த ஜனவரி முதல் செயல்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், சில வாரங்களாக […]

You May Like