fbpx

”பத்திரிகையாளர்களின் செல்போனை ஏன் பறிமுதல் பண்ணீங்க”..? ”உடனே ஒப்படையுங்க”..!! காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பத்திரிகையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திருப்பித் தருமாறு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறையினர் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விசாரணையின்போது, குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும் என்றும், முதல் தகவல் அறிக்கையை பதிவேற்றம் செய்தது யார் என்றும் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், பத்திரிகையாளர்களுக்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது ஏன்..? பத்திரிகையாளர்களை தவிர வேறு யாரையெல்லாம் விசாரித்தீர்கள்..? கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை விசாரித்தீர்களா? அவரது வாக்குமூலம் எங்கே என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More : அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பவரா நீங்கள்..? இனி உங்களுக்கு முழங்கால் வலியே வராது..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!

English Summary

The Chennai High Court has issued a directive to the police to return the cell phones confiscated from journalists.

Chella

Next Post

ECR சாலையில் மீண்டும் ஒரு பயங்கரம்..!! திமுக கட்சிக் கொடியுடன் கார் ரேஸ்..!! அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!! பதபதைக்க வைக்கும் வீடியோ..!!

Tue Feb 4 , 2025
A video of two luxury cars with DMK flags racing on Chennai's ECR Road is going viral on social media.

You May Like