கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை பலாத்காரம் செய்து சீரழித்து, அவருக்கு புதிய வாழ்வு கொடுக்கும் நல்லவன் போல அன்பை காண்பித்து மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 12 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் தனியே வசித்து வருகிறார். திருமணமான 2 ஆண்டுகளில், இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர், பெண்ணின் கணவர் பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில், இந்தப் பெண் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபோது, உடன் பணியாற்றிய மனோஜ் என்பவர் பெண்ணிடம் நட்பாக பேசி வந்துள்லார்.
ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளனர். பெண்ணின் குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்ட மனோஜ், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். விருப்பம் இல்லாத பெண், தனக்கு திருமணம் வேண்டாம் என்றும் குழந்தைகளுடன் நான் வாழ்ந்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, சம்பவத்தன்று நிறுவனத்தில் ஆட்கள் இல்லாத சமயத்தில், அறையை பூட்டி அந்த பெண்ணை மனோஜ் வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே, அவ்வப்போது பெண்ணிடம் நிறுவன செலவுக்கு ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரை பறித்துள்ளார் மனோஜ். இந்நிலையில், சம்பவத்தன்று பெண்ணுக்கு தொடர்புகொண்ட மனோஜின் நண்பர், உன்னுடைய நிர்வாண வீடியோ என்னிடம் உள்ளது. மனோஜ் எனக்கு அனுப்பினார். நீ என்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண், அந்த வீடியோவை எதற்கு உன்னுடைய நண்பருக்கு அனுப்பி வைத்தாய்.? என கேட்டபோது, அப்படித்தான் அனுப்புவேன். உன்னை தொடர்புகொள்ளும் நபர்களுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டுமென கூறியுள்ளார். இதனால் மனமுடைந்துபோன இளம்பெண், திருச்சி மாநகர காவல் ஆணையர், கொள்ளிடம் காவல் நிலையம், ஐஜி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.