Green Gowns: மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை செய்யும் போது, மருத்துவர்கள் பச்சை அல்லது நீல நிற ஆடைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இப்படிப் பயன்படுத்துவதற்குக் காரணம் உண்டா? என்று நம்மில் யாரேனும் யோசித்து இருக்குமா?. இந்த நிறங்களில் ஆடைகளை உடுத்துவதற்கு காரணம் உள்ளது.
1914ஆம் ஆண்டு வரைக்கும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வெள்ளை நிற ஆடைகளை தான் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் நாளடைவில் வெள்ளை நிற ஆடைகளை தவிர்த்து, பச்சை மற்றும் நில நிற ஆடைகளை தான் பயன்படுத்தி வருகின்றனர். காரணம், அறுவை சிகிச்சை செய்யும் போது பிரகாசமான விளக்குகள் தான் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது சுத்தி இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அணிந்திருக்கும் வெள்ளை நிற ஆடைகள் கிளாரை ஏற்படுத்தும். இதனால் அறுவை சிகிச்சை செய்வதில் மருத்துவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதோடு மட்டுமல்லாமல் வெள்ளை நிற ஆடை அணிந்து பல மணி நேரம் அறுவை சிகிச்சையின் போது, சிவப்பு நிறத்தில் இருக்கும் உறுப்புகளை உற்றுப் பார்த்து விட்டு, உடனே நிமிர்ந்து வெள்ளை ஆடைகளை பார்க்கும் போது ஆடைகளில், உறுப்புகள், பச்சை நிறத்தில் கோஸ்ட் இமெஜ் போல் தெரியும். காரணம் தொடர்ந்து சிவப்பு கலரை உற்றுப் பார்த்து விட்டு திடீரென வெள்ளை நிறத்தை பார்க்கும் போது, மூளை desensitization ஆவதனால் சிவப்பு நிறத்திற்கு எதிர் நிறமான பச்சை நிறம் தெரியும்.
இதனால் தொடர்ந்து அறுவை சிகிச்சையின் போது, மூளை சோர்வாகி தடை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது, நீலம் மற்றும் பச்சை நிறத்தில் ஆடைகளை அணிந்திருந்தால், மூளை புத்துணர்ச்சி பெற்று அறுவை சிகிச்சை தடையின்றி நடைபெறும் என்பதால், இந்த நிறத்தில் ஆடைகளை அணிந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர்.
Readmore: எச்சரிக்கை!. தலைமுடிக்கு டை அடிக்கிறீர்களா?. புற்றுநோயை உருவாக்கும் அபாயம் அதிகரிப்பு!.