பெரும்பாலான ஆண்களுக்கு இளம்பெண்களை விட வயதில் மூத்த பெண்கள் அல்லது நடுத்தர வயது கொண்ட பெண்களிடம்தான் அதிக ஈர்ப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், சமூகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் ஏன் ஆண்கள் இதில் இப்படி ஈர்ப்பாக இருக்கிறார்கள்? என்கிற கேள்வி நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இதற்கான காரணங்களை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
இந்தியா போன்ற நீண்ட பண்பாட்டு பாரம்பரியம் மிக்க நாடுகளில் ஆண், பெண் உறவு என்பது சமூகத்தில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. காதலில் தொடங்கி திருமணம் வரை ஒரு ஆண் எந்த பெண்ணை தேர்ந்தெடுக்கிறார் என்பதை அனைவரும் உற்று நோக்குகின்றனர். ஒருவேளை தன்னுடைய வயதை விட அதிக வயதுள்ள பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அல்லது காதலித்தால் அதை இந்த சமூகம் எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. இருப்பினும் சினிமா பிரபலங்கள் தொடங்கி, கிரிக்கெட் பிரபலங்கள் வரை சில ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களை தான் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதனை பின்பற்றியே சில ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துள்ளனர்.
ஆனால், அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட விஷயங்கள் இவர்களுக்கு கடும் நெருக்கடியை தருகிறது. இருந்தாலும் ஏன் வயது மூத்த பெண்களிடம் ஆண்களுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது? என்கிற கேள்வி பரவலாக கேட்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணங்களை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதாவது இதற்கு அடிப்படையான காரணமாக இருப்பது பெண்களின் அனுபவம்தான். பெண்கள் எந்த அளவுக்கு வயதானவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு உறவுகளை கையாள்வதில் அனுபவமிக்கவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பெற்றிருக்கும் அனுபவங்கள் மூலம் ஒரு ஆணுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் மிக எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். எல்லா விஷயங்களை போலவும் உறவு முறையிலும் ஆண்களின் எதிர்பார்ப்பை பெண்கள் சட்டென கண்டுகொண்டுவிடுவார்கள்.
பெண்கள் பிறந்தது முதல் சகோதரி, தோழி, காதலி, மனைவி என பல்வேறு உறவில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் இந்த உறவு முறையில் ஆண்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை பெண்கள் கவனமாக பார்த்து வந்திருக்கிறார்கள். சரியாக சொல்வதெனில் ஆண்களின் ஒவ்வொரு நகர்வும் பெண்களுக்கு அத்துப்படி. எனவே, ஆண்களின் தேவை என்ன என்பது பெண்களுக்கு நன்றாக தெரியும். அதேபோல பாலியல் தேவைகளையும் வயது மூத்த பெண்களால் சரியாக புரிந்துக் கொள்ள முடியும்.
இப்படி கூறுவதால் பெண்கள் தவறாக நினைக்கக்கூடாது. ஏனென்றால், பெண்களை இப்படி மாற்றியது ஆண்கள்தான். ஆபாச படங்கள் தொடங்கி பல்வேறு கோளாறான விஷயங்களை மண்டையில் ஏற்றிக்கொண்டு அந்த பாலியல் இச்சைகளை தீர்க்கும் பொருளாக பெண்களை ஆண்கள்தான் அணுகுகிறார்கள். இதனால் முன்பின் அறியப்படாத பாலியல் செயல்பாடுகளை பெண்கள் அனுபவிக்க நேர்கிறது. இதுதான் பெண்களை பாலியல் விஷயங்களில் அதிக அனுபவம் கொண்டவர்களாக மாற்றுகிறது.
அதேபோல பெண்கள் தங்களது பாலுணர்வை இளையவர்களிடம் எவ்வித தயக்கமும் இன்றி வெளிக்காட்டுகிறார்கள். இளம் வயதில் தாங்கள் கொண்டிருந்த பாலியல் சகிப்புத்தன்மையை விட வயதில் மூத்த பருவத்தில் இவர்களிடம் பாலியல் சகிப்புத்தன்மை குறைவாகதான் இருக்கும். அக்கறை, சரியான புரிதல், பாலியல் விவகாரங்களில் மெச்சூரிட்டி உள்ளிட்ட விஷயங்கள்தான் வயது மூத்த பெண்களிடம் ஆண்கள் காதலில் விழுவதற்கு காரணமாக இருக்கிறது.