fbpx

‘மாட்டுப்பொங்கல் எதற்காக கொண்டாடுகிறோம்’..? ’எப்படி கொண்டாட வேண்டும்’..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

தமிழ்நாட்டில் ஏராளமான பாரம்பரிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வந்தாலும், 4 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் திருவிழா நம் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. பொங்கல் திருவிழா துவங்க இன்று ஒருநாள் மட்டுமே இருக்கிறது. நடப்பாண்டு ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் துவங்குகிறது பொங்கல் திருவிழா. ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கல் என்கிற சூரிய பொங்கலை கோலாகலமாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி மாட்டு பொங்கலும், ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. நமக்கு மிக முக்கிய பண்டிகையாக இருந்து வரும் பொங்கல் பண்டிகையின் வரலாற்றை பார்த்தோமானால், விவசாயத்தை செழிக்க வைக்கும் சூரியன் மற்றும் பிற உயிர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கொண்டாட்டமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இயற்கைக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரமான உழவையும், உழவுக்கு உதவி செய்பவற்றையும் போற்றி வழிபட ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல் பண்டிகை. இதில், சூரியனை வழிபடுவது தை பொங்கலின் முக்கியமான நோக்கமாக உள்ளது. புது பானையில் பொங்கல் பொங்குவது போல அனைவரது வாழ்விலும் வசந்தம் பொங்கி வழிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த பண்டிகையை அனைவரும் கொண்டாடுகின்றனர்.

தை பொங்கல் அல்லது சூரிய பொங்கலுக்கு அடுத்த நாள் வழக்கமாக கொண்டாடப்பட்டு வரும் மாட்டு பொங்கல் பற்றி தெரிந்து கொள்ளலாம். மாட்டு பொங்கல் எதற்காக கொண்டாடப்படுகிறது, அன்றைய நாள் எப்படி கொண்டாடப்படும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மாட்டு பொங்கல்

விவசாயத்தில் உழவர்களுடன் சேர்ந்து மாடுகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஆகையால், மாடுகளின் உழைப்பை காலப்போக்கில் மனிதம் மறந்து விடக் கூடாது, மாடுகளின் மிக கடுமையான உழைப்பை அங்கீகரித்து அவற்றை கவுரவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூரியனை வழிபட்ட பிறகு அடுத்த நாள் மாடுகளுக்கென்றே பிரத்யேகமாக கொண்டாடப்படுவது தான் மாட்டு பொங்கல். மனிதனுக்கு உணவு வருவதற்கு முன், மனிதனுடன் சேர்ந்து மற்றொரு ஜீவனும் தன் உயிரை கொடுத்து உழைத்தால்தான் எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கும்.

மாடுகளின்றி பல்லயிரக்கணக்கான ஆண்டுகள் விவசாயம் செழித்திருக்க முடியாது. எனவே, மாடுகள் மீது மக்களுக்கு நன்றியுணர்வு இருக்க வேண்டும் என்பதற்காகவும் நம் கலாச்சாரத்தில் மாடுகளைக் கொண்டாடும் மாட்டுபொங்கல் விழாவை உருவாக்கி இருக்கின்றனர். கிராமங்களிடையே இது பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்நாளில் மாடுகள் மற்றும் கன்றுகள் வசிக்கும் தொழுவம் நன்கு சுத்தம் செய்யப்படுகிறது.

பின்னர் மாடுகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து அவற்றின் கொம்புகளில் வர்ணம் பூசி அவற்றை மேலும் பல விதமாக அலங்கரித்து, சலங்கைகளையும் கட்டி விடுவார்கள். மேலும், மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்பு கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து அலங்கரித்து வழிபடுவார்கள். மாடுகளை மட்டுமின்றி உழவுக்கு உதவும் கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாடுகளோடு சேர்த்து அவற்றையும் வழிபடுவார்கள். பல ஊர்களில் மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட மாடுகள் சார்ந்த வீர விளையாட்டுகளும் நடைபெறும்.

Chella

Next Post

என்னது..!! குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்களும் தாய்ப்பால் கொடுக்க முடியுமா..? எப்படி தெரியுமா..?

Sat Jan 13 , 2024
கருத்தரித்த பெண்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்க முடியும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கர்ப்பம் ஆகாமலும் தாய்ப்பால் கொடுக்க முடியும் என்றும், திருநங்கைகளும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றன. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா..? இது எப்படி சாத்தியம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். கர்ப்ப காலத்தில், தாய்ப்பால் சுரப்பதைத் தடுப்பதற்காக ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்குமாம். குழந்தை பிறந்த பின்னர் […]

You May Like