அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இசையமைப்பாளர் டி. இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்தார். இதனை ஏதோ நான் ஒரு மூன்றாவது நபர் மூலமாக தெரிந்து கொள்ளவில்லை. நானே அனுபவபூர்வமாக உணர்ந்தேன் என பேசியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக நடிகை அனுபரமி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ”குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று நினைத்து இமான் உண்மையை வெளிப்படுத்துகிறாரே, பிறகு ஏன் இப்போது ரியாக்ட் செய்கிறார். விவாகரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு ஏன் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். சிவகார்த்திகேயன் பல போராட்டங்களின் மூலம் தற்போது தனது நிலையை அடைந்துள்ளார்.
ஒரு நடிகராக இருந்து இங்கு வருவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். ஆனால், அவரின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் தற்போது இமானை தூண்டிவிட்டு இப்படி கூறுவதாக சொல்கிறார்கள். இமான் தனது குழந்தைகளால் உண்மையைச் சொல்லவில்லை என்று கூறுகிறார். ஏன் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா?. ஒரு பகுதியை மட்டும் கேட்டு ஒருவரைக் குற்றவாளியாக்குவது நல்லதல்ல” என்றார்.