fbpx

’உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்’..? ’மகளிருக்கு வழங்கும் ரூ.1,000 இப்படித்தான் தர்றாங்க’..!! சீமான் புது விளக்கம்..!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்படி வழங்கப்படுகிறது என்பது குறித்து சீமான் புது விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி, அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்படி வழங்கப்படுகிறது என்பது குறித்து சீமான் புது விளக்கம் கொடுத்தார்.

அதாவது, எஸ்சி\எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை எடுத்து மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், தாலிக்கு தங்கம் திட்டம் கொடுத்தோம் என கூறுகிறார்கள். அரை சவரன் தாலி வாங்கிக் கூட பெண்ணுக்கு கட்ட முடியாதவனுக்கு எதற்கு திருமணம்? அந்த பெண்ணை எப்படி அவன் காப்பாறுவான் என கேள்வி எழுப்பினார்.

Read More : அடடே..!! ஒற்றை தலைவலி கூட உடனே பறந்துபோய்விடும்..!! கற்பூர வாசனையை சுவாசிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?

Chella

Next Post

’தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடியிடம் இருக்காது’..!! ’தினகரனுக்கே சொந்தம்’..!! அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!!

Sat Apr 13 , 2024
“தேர்தலுக்கு பிறகு எடப்பாடி தலைமையிலான அதிமுக இருக்காது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து தமிழக பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஒப்பந்ததாரர்களுக்காக அதிமுக நடத்தப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இதை எல்லாம் ஆண்டவனோடு சேர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அதிமுகவை ஒப்பந்தரார்களுக்கு தாரை […]

You May Like