fbpx

ரயிலில் “General compartment” கடைசியில் இருப்பதற்கு காரணம் இதுதானா….? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே….?

பொதுவாக மக்கள் ரயில் பயணத்தை அதிகமாக விரும்புவதற்கு காரணம் அந்த ரயில் பயணத்தின் போது ஏற்படும் பல் வேறு சுவாரசியமான அனுபவங்கள் மற்றும் பயண செலவு குறைவு போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது போன்ற காரணங்களால் தான் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். அதிலும், தினமும் இந்த ரயில்களில் பயணம் செய்பவர்களின் அனுபவம் என்பது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும்.

இந்த ரயில் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை பற்றி தற்போது நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் அவ்வப்போது ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், வெகுதூர பயணங்களின்போது எப்போதும் ரயிலின் நடுப்பகுதியில் ஏசி பெட்டிகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்க முடியும்.

அதே போன்று ஸ்லீப்பர் பெட்டியை அடுத்து என்ஜினுக்கு பிறகு பொது பெட்டிகள் (General compartment) அமைந்திருக்கும் எல்லா ரயில்களிலுமே ரயிலின் நடுப்பகுதியில் ஏசி பெட்டிகள் இருக்கின்றன. இதனை தொடர்ந்து, சில ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் ரயிலின் பொது பெட்டிகள் இருக்கின்றன. ஆனால் பொது பெட்டிகள் அல்லது அன் ரிசர்வ்டு பெட்டிகள் ரயிலின் முன் பகுதி அல்லது கடைசி பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். இது ஏழை, எளிய மக்களின் உயிருடன் விளையாடும் செயலாகும் என்று பலரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். ஆனால் இதற்கு ரயில்வே ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளது.

அதாவது, ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும் எல்லா பெட்டிகளும் ரயில் இயக்க விதிகளின்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், இதில் ஏழை, பணக்காரர் என்ற எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பொது பெட்டிகள் எதற்காக ரயிலின் ஆரம்பத்தில் அல்லது முடிவில் இணைக்கப்பட்டிருக்கிறது? என்பது தொடர்பாகவும் விளக்கம் கொடுத்துள்ளது ரயில்வே. அதன்படி மற்ற பெட்டிகளை விடவும் பொது பெட்டிகளில் (general compartments) தான் அதிகமான பயணிகள் பயணம் செய்வார்கள். கூட்டம் அதிகமாக இருந்து கொண்டே இருக்கும். ரயிலின் நடுபகுதியில் பொதுப் பெட்டிகளை சேர்த்தால், அதிக எடை உண்டாகி சமநிலை பாதிக்கப்படும்.

அதேபோன்று ரயிலின் புறப்பாடு மற்றும் நிறுத்தத்திலும் சிக்கல் உண்டாகும். ஆகவே ரயிலின் முன்பகுதி அல்லது பின்பகுதியில் பொது பெட்டிகள் உள்ளதால், பயணிகள் கூட்டம் சமமாக பிரிக்கப்படுகின்றது. அத்துடன், ரயிலின் இஞ்சினை சேர்ப்பதிலும், ரயிலின் சமநிலையிலும் பயனுள்ளதாக அமையும். விபத்து மற்றும் தடம் புரள்தல் அல்லது வேறு ஏதாவது அவசர காலங்களில், அதிக எண்ணிக்கையை கொண்ட இந்தப் பெட்டிகளில் இருந்து பொதுமக்களை விரைவாக வெளியேற்ற இயலும். ஆகவே இது பயணிகளின் பாதுகாப்புக்கு நன்மை தரும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Post

ஒரே தீவு, ஒரே குடும்பம்!… பள்ளிக்கூடம், உணவகம், தேவாலயம் என அனைத்தும்!… ஆச்சரியம் நிறைந்த வாழ்க்கை!

Thu Oct 26 , 2023
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட தீவுகளில் ஒன்றாக கருதப்படும், சாண்டா குரூஸ் டெல் ஐசொலேட் (தீவு) கொலம்பியாவின் சான் பெர்னார்டோ தீவுக்கூடத்தில் மொரோஸ்குவில்லோ வளைகுடாவில் அமைந்துள்ளது. இங்கு 10 தீவுகளை கொண்ட தீவுக்கூடம் இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த சாண்டா க்ரூஸ். இந்த தீவு, கடல் படுக்கை மற்றும் பவளத்தின் கலவையில் அமர்ந்திருக்கிறது. இதனால் தூரத்தில் இருந்து பார்க்க இந்த தீவு கடல் நீரின் மேல் மிதந்து […]

You May Like