fbpx

70 வயதான ஏழை முதியவரை திருமணம் செய்த 19 வயது இளம்பெண் காரணம் என்ன?

70 வயதான ஏழை முதியவரை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் எதற்காக இந்த திருமணம் நடந்தது என இந்த ஜோடி தகவல் வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் 19 வயது இளம்பெண் ஒருவர் 70 வயது மதிக்கத்தக்க நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் தனித்துவமான காதல் கதை சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. 70 வயதான ஏழை முதியவரான லியாகத் அலி (70) இவர் ஷூமைலாஅலி (19) என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்தியாவில் பல வாலிபர்கள் பெண் கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த காதல் கதை வயிற்றெரிச்சலை உண்டுபண்ணும்.

லாகூரில் காலையில் நடைபயிற்சியின்போது இருவரும் சந்தித்துள்ளனர். ஷூமைலாவுக்கு பின்னால் நடந்து சென்றபோது லியாகத் ஒரு பாடலை பாடியுள்ளார். முதன் முதலில் இந்த பாட்டுக்குதான் ஷுமைலா மயங்கிவிட்டாராம். இது பற்றி லியாகத் கூறுகையில் ’’ காதல் வயதைப் பார்ப்பதில்லை அது தானாக நடக்கும். வயது வித்தியாசத்தை கடந்து திருமணம் செய்பவர்களை யாரும் விமர்சிக்க கூடாது. அவர்களின் முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவரவர்களின் வாழ்க்கையை அவர்கள் விரும்பியபடி வாழ அவர்களுக்கு உரிமை உண்டு.’’ என தெரிவித்தார்.

மேலும் 70 வயதான லியாகத் கூறுகையில் ’’ எனது பெற்றோர் முதலில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தோம்.’’ என்றார்.

எனக்கு 70 வயதாக இருந்தாலும் மனதளவில் இளமையாக இருப்பதாகவும், காதலில் வயது ஒரு விஷயம் இல்லை என்றும் லியாகத் அலி தெரிவித்துள்ளார். தனது மனைவியின் சமையலில் மிகவும் மகிழ்ந்ததாகவும் உணவகத்திற்கு செல்வதை விட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். வயது வித்தியாசம் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என கேட்டபோது ஒருவரது வயது என்ன என்பது இங்கு கேள்வி இல்லை. சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளஅனுமதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.

இது பற்றி ஷுமைலா , ’’ மோசமான உறவில் மாட்டிக் கொள்வதை விட, ஒரு நல்ல நபரை தேர்வு செய்வது முக்கியம் எனவும், வயது வித்தியாசத்தை விட தனிப்பட்ட கண்ணியமும், மரியாதையும்தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஷுமைலா தெரிவித்தார்.’’

சமீபத்தில் 57 வயதான நடிகர் பப்ளு 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதற்கு இளசுகள் பலத்த விமர்சனத்தை முன் வைத்தது. 54 வயது ஆண், 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்வதா? பணத்திற்காக திருமணம் செய்து கொள்வார்கள். என்பது போன்ற விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் 70 வயதான முதியவர் 19 வயதான பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஏறக்குறைய இருவருக்கும் 50 வருடங்கள் வித்தியாசம் உள்ளது. இதற்கு  எப்படி எல்லாம் கொந்தளிக்க போகின்றார்களோ…!!

Next Post

ஒரே குடும்பமாக வாழும் 72 பேர் தினமும் இவங்க எப்படி சமைக்குறாங்க தெரியுமா?

Thu Nov 17 , 2022
தாத்தா, கொல்லு தாத்தா, பாட்டி, கொல்லுபாட்டி என மொத்த சொந்தங்களுடன் ஒரே குடும்பமாக 72 பேரும் ஒன்றாக சமைத்து வாழும் குடும்பத்தினர் பற்றிய புகைப்படம் வைரலாகி வருகின்றது. மகாராஷ்டிராவில் சோலாபூர் என்ற பகுதியில் 72 பேர் கொண்ட ஒரு குடும்பம் வாழ்ந்து வருவது பிற மாநில மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளாகவே இப்படி கூட்டுக்குடும்பமாகத்தான் வாழ்ந்து வருவதாக நெகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு […]

You May Like