முரசொலி மாறன் திமுகவில் அறிவுஜீவிகள் அணிக்கு தலைவராக இருந்தவர் என திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என் நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ”முரசொலி மாறன் திமுகவில் அறிவுஜீவிகள் அணிக்கு தலைவராக இருந்தவர்” என்றார்.
கலைஞருடைய அக்கா மகன் என்றாலும் சாதாரண தொண்டனைப் போல் இயக்கப் பணிகள் ஆற்றியவர். மத்திய அமைச்சராக இருக்கும்போது அமைச்சரவையே வியக்கும் வகையில் பணியாற்றியவர் முரசொலி மாறன். இன்றைக்கும் நாடாளுமன்றத்தில் முரசொலி மாறனுக்கு தனிப்புகழ் உண்டு. முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு முதலிலேயே சொல்லி விடணுமா? அவர் வந்து சொல்வார் என்று பதிலளித்தார் துரைமுருகன்.