fbpx

’இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்..’? – சீமான் கேள்வி

இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடை செய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தற்கொலைக்கு முன் தம்பி எழுதிய உருக்கமான கடிதம் நெஞ்சை உலுக்கிவிட்டது. தொடர்ந்து உயிர்பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், இணையவழி சூதாட்டங்களைத் தடை செய்யாமல் காலங்கடத்தி வரும் திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

’இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்..’? - சீமான் கேள்வி

குறுக்குவழியில் அதிகப் பணம் ஈட்டுவதற்கான ஆசையைத் தூண்டி இளைஞர்களை மாய வலையில் விழவைக்கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்குப் பேராபத்தாக மாறி நிற்கிறது. இணையவழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றித் தன்னம்பிக்கை உள்ளிட்ட அடிப்படை மனித நற்பண்புகளை அழித்து, இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, அவர்களின் வாழ்வினையே பாழ்படுத்துகிறது.

’இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்..’? - சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூகநல ஆர்வலர்களும் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, இணையவழி சூதாட்டங்களுக்குத் தடை விதிக்க, கடந்த அதிமுக ஆட்சியின்போது அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பின், நீதிமன்றம் மூலம் தடை நீக்கம் பெற்றபோதிலும், அடுத்த 6 மாதத்திற்குள் வலுவான சட்டம் இயற்றி, முறையாகத் தடைசெய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி ஓராண்டு கடந்தும் இதுவரை தமிழ்நாடு அரசு தடைச்சட்டம் இயற்ற மறுப்பது ஏன்? இணையவழிச் சூதாட்டங்களைத் தடைச்செய்வது குறித்து ஆராய, தமிழக அரசால் நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவானது, புதிய தடைச் சட்டம் இயற்ற வேண்டுமெனப் பரிந்துரைத்து இரண்டு மாதங்களாகியும் இதுவரை தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்?

’இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்..’? - சீமான் கேள்வி

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்ற தமிழிளம் தலைமுறையினரின் உயிர்கள் பறிபோய்க்கொண்டிருக்கச் சிறிதும் ஈவு இரக்கமின்றி இன்றளவும் சூதாட்டங்களைத் தடை செய்ய மறுத்து வருவது திமுக அரசின் மீது மிகப்பெரிய ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, யாருடைய தூண்டுதலால் இன்று வரை தடை செய்ய மறுத்து ஏமாற்றி வருகிறது? மக்களின் நலத்தில் சிறிதேனும் அக்கறை இருக்குமாயின், இளைஞர்களை உயிர்பலி எடுக்கும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை முற்றாகத் தடை செய்ய உடனடியாக வலுவான சட்டம் இயற்ற வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பேச மறுத்த காதலி..! கழுத்தை அறுத்த காதலன்..! தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு..!

Fri Aug 5 , 2022
திருச்செந்தூர் அருகே காதலியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் வனசந்தியா (20). இவர் உடன்குடி அருகே ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் கார்த்திக் (21). இவர், ஆட்டோ ஓட்டுநராக வேலைப் பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். […]

You May Like