fbpx

பிளேடுகளுக்கு நடுவில் ஏன் இடைவெளி உள்ளது..? இதுதான் காரணமாம்..

நம் அன்றாட வாழ்க்கையில் எழுதுபொருட்கள், டூத் பிரஷ்கள் மற்றும் ரேஸர் பிளேடுகள் போன்ற பல பொருட்களை பயன்படுத்துகிறோம்.. ஆனால், ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால், அதன் வடிவம் மற்றும் செயல்பாட்டின் பின்னால் ஒரு முக்கிய காரணமும் நோக்கமும் இருக்கிறது. சில பொருட்கள் ஏன் ஒரே வடிவத்தில் மட்டும் கிடைக்கிறது.. யார் அதை உருவாக்கினார்கள்.. என்பது போன்ற பல கேள்விகள் எழும்… அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளேடு ஏன் ஒரே வடிவத்தில் இருக்கிறது.. அதை யார் அதை உருவாக்கியது என்பது பற்றி பார்க்கலாம்..

பிளேட்டின் இந்த தோற்றத்தின் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. 1901 இல் ஜில்லட் நிறுவனத்தைத் தொடங்கிய கேம்ப் ஜில்லட், பிளேட்டை வடிவமைத்தார்.. அந்த நிறுவனம் தான் முதன் முதலில் பிஎளேடு மற்றும் ரேசர்களை உருவாக்க தொடங்கியது.. பிளேடு மிகவும் மெல்லியதாக இருப்பதால், அதன் மீது லேசாக அழுத்தினால் கூட உடைய வாய்ப்புள்ளது.. எனவே அது நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்க நடுவில் இடைவெளி வைக்கப்பட்டுள்ளது. அதனால் அதை மடித்து அல்லது அழுத்தம் கொடுக்கும்போது உடையாது. மேலும் இந்த அளவு ரேஸருக்கு எளிதில் பொருந்தும்.

1901 ஆம் ஆண்டில், ஜில்லெட் நிறுவனம் பிளேடிற்கு கொடுத்த வடிவமைப்பு இன்னும் அப்படியே உள்ளது. ஜில்லட் நிறுவனம் தனது ரேசர் மற்றும் பிளேடை ஆரம்பிக்கும் போது பிளேடுக்கான 25 ஆண்டு காப்புரிமையும் வாங்கிவிட்டார்களாம்.. மற்ற நிறுவனங்கள் ரேசர்களை உருவாக்கினாலும், அவர்கள் ஜில்லெட்டின் பிளேடுகளை பயன்படுத்த வேண்டியிருந்தது… ஆனால் 25 ஆண்டுகள் ஆன பிறகும் தங்களுடைய லாபம் கருதி பிளேடின் இந்த டிசைனை மாற்றவே இல்லை.. இதன் காரணமாகவே 1901 முதல் பிளேடு ஒரே டிசைனிலேயே உள்ளது.. தற்போது, தினமும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிளேடுகள் தயாரிக்கப்படுகின்றன, மேலும் ரேஸர்களின் யூஸ் அண்ட் த்ரோ டிசைன்களும் வரத் தொடங்கியுள்ளன, ஆனால் அதன் பிறகு பிளேடின் வடிவமைப்பு மாறவில்லை.

Maha

Next Post

சிரியாவில் மீண்டும் 6.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்...! இது வரை 45,000 பேர் உயிரிழப்பு..‌.!

Tue Feb 21 , 2023
துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு கிமீ ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு கிமீ ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD, 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஹடாய் மாகாணத்தில் உள்ள டெஃப்னே நகரத்தை மையமாகக் கொண்டது என்று கூறியது. அதைத் […]

You May Like