நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு நடிகையால் தான் படத்தில் நடிப்பதையே நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை டி.வி. தொகுப்பாளராக நாம் பார்த்திருக்கின்றோம். சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிஷ்ணன் . இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். சில வருடங்களாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கு என்ன காரணம் என்று அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கின்றார்.

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜயின் சகோதரியுமான வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றார். திருமணம் பல்வேறு சர்ச்சைகளை கொண்டு வந்தது. அப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் சில கருத்துக்களை முன்வைத்தார். அவர் ஒரு யூடியூப் சேனலில் லட்சுமி ராமகிஷ்ணன் லைவ் பேட்டியில் இடையில் வந்த வனிதா மரியாதை குறைவாக பேசினார். அதை நினைத்தால் எனக்க அருவருப்பாக இருக்கின்றது. ஏண்டா நடிக்கவந்தோம் என இருந்தது என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். பின்னர் தான் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை எனவும் நமீபத்தில் நிகழ்ச்ச ஒன்றில் அவரே கூறியிருக்கின்றார்.