fbpx

உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தர மறுப்பது ஏன்? – விஜயகாந்த்

கொரோனாவுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள். அரசாணை 354-ஐ 2017 முதல் அமல்படுத்தி நிலுவைத் தொகையுடன் செயல்படுத்த வேண்டும், 6 ஆண்டுகள் நடத்தப்படாமல் உள்ள பல் மருத்துவர்கள் மற்றும் சிடிஎஸ், ஸ்பெஷாலிட்டிக்கான பதவி உயர்வு கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும், கொரோனா உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடமிருந்து நிவாரணம் தரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்.. என்ன ஆச்சு? - அறிக்கை விட்ட  தேமுதிக! | DMDK chief Vijayakanth admitted in hospital - Tamil Oneindia

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வரும் நிலையில், அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக் கேற்ற ஊதியம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தர மறுப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. கொரோனா வைரசுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

Captain Vijayakanth's latest photos shock fans - Tamil News - IndiaGlitz.com

தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அளப்பறிய பணியாற்றி கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மக்கள் உங்களுடன் எப்போதும் இருப்பார்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரகாஷ்ராஜ்..!

Fri Jul 1 , 2022
மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரைப்பட துறையைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய திரைத்துறையில் மிக பிரபலமானவரும் வில்லன் நடிகருமான நடிகர் பிரகாஷ் ராஜ் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது, மக்கள் என்றும் உங்களுடன் இருப்பார்கள் […]

You May Like