பெண்களுக்கு மட்டும் இரவில் ஏன் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2019 ஆம் ஆண்டு உயர்கல்வி பயிலும் மாணவிகள் இரவு 9.30மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வரக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஐந்து மாணவிகள் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு, ஆண்களுக்கு இல்லையா? 9.30 மணிக்கு மேல் பெண்கள் விடுதிகளை விட்டு வெளியேறக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
“பெண்களும் இந்த சமூகத்தில் வாழ வேண்டும். இரவு 9.30 மணிக்கு மேல் தலை விழுந்து விடுமா? மலைகள் இடிந்து விழுமா? வளாகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது,” என்று கூறிய நீதிபத்தி, மாநிலத்தில் எந்த விடுதியிலாவது ஆண்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளதா, இரவில் பயப்படத் தேவையில்லை என்றும், இருட்டிய பிறகு அனைவரும் பாதுகாப்பாக வெளியே செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். பிரச்சனை செய்யும் ஆண்களை தன் அடைக்க வேண்டுமே தவிர பெண்களை அல்ல என்று நீதிபதி தெரிவித்தார். ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே சுதந்திரம் பெண்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டது.