fbpx

எதற்கு இத்தனை சீனியர் வக்கீல்கள்..? நீதிபதியை மிரள வைத்த பொன்முடி..!! சுப்ரீம் கோர்ட்டில் நடந்த சம்பவம்..!!

கடந்த 2006 – 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் பொன்முடி. இவர், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிந்தது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி எழுப்பிய கேள்வி : இந்த வழக்கு விசாரணையின்போது பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சித்தார்த் லுத்ரா உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர். இதனைக் கண்டு நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, “இந்த வழக்கில் என்ன ஸ்பெஷல்? ஏன் இத்தனை மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகியிருக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, பொன்முடி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு அனுமதித்த நீதிபதி, பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.

Chella

Next Post

10,000 சிசிடிவி கேமராக்கள்..!கண்காணிப்பு வளையத்தில் அயோத்தி!…

Sat Jan 13 , 2024
மிக பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்தி மாவட்டம் முழுவதும் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தி முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு […]

You May Like