பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கப்பட்டம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. வினேஷ் போகத்துக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தேசமும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ஐடி விங்கினர் வினேஷ் போகத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும், அண்மையில் பாஜகவில் இணைந்த சாய்னா நேவாலும் அதிர்ச்சிகரமான ஒரு கருத்தை கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “நான் கடந்த 2 நாட்களாக வினேஷ் போகத்துக்கு ஆதரவாக கடந்த இருந்தேன். பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இந்த நொடிக்காக தான் ஒவ்வொரு வீரர்களும் தயாராகி இருப்பார்கள். தற்போது வினேஷ் போகத் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
வினேஷ் போகத்தின் நிலையை விவரிக்க தற்போது வார்த்தையே இல்லை. அவர் ஒரு போராளி. நிச்சயம் அவர் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவார். அடுத்த முறை நிச்சயமாக பதக்கத்தை வெல்வார் என்று நம்புகிறேன். அவருக்கு எது சரி..? எது தவறு என்று நன்றாகவே தெரியும். எனக்கு மல்யுத்தத்தில் என்ன நடக்கும் என்பதெல்லாம் தெரியாது. ஒலிம்பிக் கமிட்டி இடம் இது குறித்து மேல்முறையீடு செய்ய முடியுமா? என்றும் எனக்கு தெரியாது.
ஆனால், விதிகள் என்ன என்று வினோஷ் போகத்துக்கு நன்றாகவே தெரியும். அவர் என்ன தவறு செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், இப்படிப்பட்ட ஒரு தவறு நடந்திருக்க கூடாது. இது போன்ற வீராங்கனைகள் இந்த தவறை செய்திருக்கக் கூடாது. இது எப்படி நடந்தது என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இது அவருக்கு முதல் ஒலிம்பிக் அல்ல. தனது மூன்றாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இருக்கிறார்.
அப்படி இருக்கும்போது விதிகள் பற்றி வினோத் போகத்துக்கு நன்றாக தெரிந்திருக்கும். என்னைக் கேட்டால் வினேஷ் மீதும் தவறு இருக்கிறது. மற்றவர்கள் மீது பழி சுமத்துவதை விட வினேஷ் போகட்டும் இந்த பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆசிய போட்டி,காமன்வெல்த் போட்டி என அனைத்திலும் சாம்பியனாக இருக்கும் வீராங்கனைக்கு இது கூட தெரியாதா..? எனவே வினேஷ் மீதும் தவறு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Read More : தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..?