fbpx

மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கு மறுத்தது ஏன்..? இதுதான் காரணம்..!! ஸ்மிருதி இரானி விளக்கம்..

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 13ஆம் தேதி, எம்பி-யான மனோஜ் குமார் ஜா, பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்தார். அந்த பதிவில், “மாதவிடாய் என்பது ஒரு குறைபாடு அல்ல. இதற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தேவையில்லை” என கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெண்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்மிருதி இரானியின் பதிலுக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஸ்மிருதி இரானி, எதனால் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை தேவையில்லை என கூறியதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் நாடாளுமன்றத்தில் பேசியபோது, எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து பேசினேன். ஏனென்றால், பணியிடத்தில் பெண்கள் பாகுபாட்டையும், துன்புறுத்தலையும் எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. ஆனால், இதற்கான கேள்வியானது அதிர்ச்சியை தூண்டும் வகையிலும், கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகவும் கொண்டிருந்தது” என்றார்.

Chella

Next Post

#BREAKING | ”பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியமில்லை”..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

Fri Dec 22 , 2023
பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொன்முடியின் சொத்துகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துகளை தற்போது மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாது என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை […]

You May Like