fbpx

பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள்? ஸ்ரீமதி மரண வழக்கில் ஐகோர்ட் கேள்வி

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள்? ஸ்ரீமதி மரண வழக்கில் ஐகோர்ட் கேள்வி

அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், பள்ளி தொடர்பான சிசிடிவிகளின் பதிவுகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், 38 நாட்களாக விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், மேலும் காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மாணவியின் உடல் இரண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் மீது என்ன வழக்கு என்றே தெரியவில்லை என்றும், மாணவி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள்? ஸ்ரீமதி மரண வழக்கில் ஐகோர்ட் கேள்வி

மாணவியின் பெற்றோர் தரப்பில் தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, ஜாமீன் மனுக்களில் காவல்துறையின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது, சிபிசிஐடி-யிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, மனுதாரர்கள் என்ன குற்றம் செய்தனர்? பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனரா? போன்ற விவரங்களை கேட்டு வந்திருக்க வேண்டும் என காவல்துறை தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார். மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Chella

Next Post

5 நாட்களும் 5 மாவட்டங்களும்..! மிக கனமழை பெய்யும்..! வானிலை மையம் எச்சரிக்கை..!

Wed Aug 24 , 2022
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, […]

You May Like