திடீரென கல்லூரி மாணவி பேசுவதை நிறுத்தியதால், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், மாணவி குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கைதாகியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கணுவாய்பாளையத்தைச் சேர்ந்தவர் விமல்குமார் (24). இவர், ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், இவருக்கு கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் தொடர்ந்து வந்த நிலையில், திடீரெனை விமல்குமாரை மாணவிக்கு பிடிக்கவில்லை. இதனால், அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால் ஏமாற்றமடைந்த ஆட்டோ ஓட்டுநர் விமல்குமார், கல்லூரி மாணவியை நேரில் சந்தித்து தன்னிடம் பேசுமாறும், தன்னைக் காதலிக்குமாறும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால், அதற்கு மாணவி சம்மதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த விமல்குமார், மாணவியைப் பழிவாங்க திட்டமிட்டார்.
அதன்படி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 15-க்கும் மேற்பட்ட போலி கணக்குகளை விமல்குமார் தொடங்கியுள்ளார். அதன் மூலம் மாணவி குறித்து அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இது மாணவியின் கவனத்திற்கு சென்ற நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விமல்குமார் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை துவங்கி, கல்லூரி மாணவி குறித்து அவதூறான பதிவுகளை பதிவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : ”இனி Zomato கிடையாது”..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!! ஆனால் இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!